Wednesday, 25 July 2012

திருமணத்திற்கு காதலி மறுத்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

விழுப்புரம் : திருமணத்திற்கு காதலி மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் பெரியகாலனியைச் சேர்ந்த பாண்டியன் மகன் மருதுபாண்டி, 23. கூலி
வேலை செய்து வந்தார். இவரும், புதுச்சேரி மாநிலம் கூனிச்சம்பட்டு பகுதியைச்
சேர்ந்த இவரது உறவினர் மகள் ராதிகா, 23, (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
என்பவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின்
திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் நேற்று முன்தினம் அதிகாலை
இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.
நேற்று காலை 7 மணிக்கு விழுப்புரம் அடுத்த திருவாமாத்தூர் கோவிலில்
திருமணம் செய்ய வந்தபோது, பெற்றோர் விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொள்ள
மாட்டேன் என ராதிகா கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த மருதுபாண்டி கோவில் எதிரேயுள்ள அணைக்கட்டு கல் தூணில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் தலைமையிலான போலீசார் மருதுபாண்டியின் உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment